

திருநெல்வேலி,
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே நிகழ்ந்த திடீர் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் - வீரவநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலம் அருகே, கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ராட்சத குழாய் இன்று திடீரென உடைந்தது. குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, அதிலிருந்த தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீய்ச்சியடிக்கிறது. பல மணி நேரமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.