குழாய் இணைப்பு பணி: சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையும், ஜே.ஜே.நகர் ஏ1 தெருவும் சந்திக்கும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
குடிநீர் வினியோகம் நிறுத்தம்
Published on

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையும், ஜே.ஜே.நகர் ஏ1 தெருவும் சந்திக்கும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி நாளை (8.6.2026) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை மாலை 5 மணி நாளை மறுநாள் (9.6.2026) இரவு 8 மணி வரை பட்டேல்நகர் நீரேற்று நிலையம் தற்காலிகமாக செயல்படாது.

குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யும் இடங்கள்:

எனவே கொருக்குப்பேட்டை பகுதிகளில் உள்ள எழில்நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதிநகர், காமராஜர்நகர், அம்பேத்கர்நகர் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் தடையின்றி வழக்கம் போல் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com