குழாய் இணைப்பு பணி: சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள நீர் கால்வாய் சாலை (Water Canal Road) சந்திப்பு மற்றும் Lucas TVS Wheels Indla தொழிற்சாலை சந்திப்பில் (பாடி மேம்பாலம் அருகில்) மத்திய பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் இன்று நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்னையில் 3 மண்டலங்களில் இன்று காலை 10 மணி முதல் நாளை (14-ந்தேதி) காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யும் இடங்கள்

மண்டலம் 6 (திரு.வி.க. நகர்): கொளத்தூர், ஜவஹர் நகர் செம்பியம், அயனாவரம், பெரம்பூர்

மண்டலம் 7 (அம்பத்தூர்): கொரட்டூர், அண்ணாநகர் மேற்கு (விரிவாக்கம்)

மண்டலம் 8 (அண்ணாநகர்): வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு

மேற்கண்ட பகுதிகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலமஅ குடிநீர் பெற்றுக்கொள்ள வாரிய்யத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com