மணலிபுதுநகர் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம்

மணலிபுதுநகர் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மணலிபுதுநகர் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம்
Published on

மத்திய அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இறக்குமதி செலவினை குறைக்கவும் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் திரவ நிலை முனையத்தை நிறுவியுள்ளது. இந்த முனையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் திரவ எரிவாயு ராட்சத டேங்கர்களில் சேமித்து வைத்து தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு குழாய் அமைத்து எரிவாயு கொண்டு செல்லப்படுவதற்கு வழித்தடம் அமைக்கப்பட்டு அங்கு வீடுகளுக்கு குழாய் மூலம் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மணலிபுதுநகர் வீச்சூர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்கு எரிவாயு அமைக்க திட்டம் தீட்டப்பட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இருந்து மணலிபுதுநகர் வரை குழாய்கள் அமைக்க உள்ளதால் விரைவில் குழாய் அமைக்கும் பணி தொடங்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com