

திருவரங்குளம்:
திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் இரண்டாம் நாள் மண்டகப்படிதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.