பி.கே.மூக்கையாதேவர் நினைவு தினம்; அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி

பி.கே.மூக்கையாதேவர் நினைவு தினம்; அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே பி.கே. மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நினைவு நாள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிறுவனரும், பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவருமான பி.கே. மூக்கையா தேவரின் நினைவிடம் உள்ளது. அவரின் 43-வது நினைவு நாளையொட்டி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி தாளாளர் வாலாந்தூர் பாண்டியன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, முன்னாள் எம்.பி. ஜக்கையன், எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா, மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் துரைதனராஜன், ஒன்றிய செயலாளர் ராஜா, பிச்சைராஜன், கவுன்சிலர் சுதாகரன், செல்லம்பட்டி ஒன்றிய பேரவை செயலாளர் பண்பாளன், கூட்டுறவு சங்கத்தலைவர் ரகு, மாணவரணி செயலாளர் வக்கீல் மகேந்திரபாண்டி, தொழிற்சங்க செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் பாவடியான் ஆகியோர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி சலுத்தினர்.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ரவீந்திரநாத் குமார் எம்.பி., உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் தலைமையில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், முன்னாள் யூனியன் தலைவர் பவளக்கொடி ராஜு, எழுமலை நகர செயலாளர் வாசிமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் தலைமையில் ஜெயலலிதா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா, உசிலம்பட்டி நகர செயலாளர் குணசேகர பாண்டியன், உசிலம்பட்டி துணை சேர்மன் பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் வீரபிரபாகரன், நரசிம்மபெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யர் என்ற ராமகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மலர்தூவி அஞ்சலி

பாப்பாபட்டி பத்துதேவர் வகையறா முன்னேற்ற சங்கம் சார்பாக தலைவர் சின்னன், செயலாளர் வாசுதேவன், பொருளாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், பி.கே. மூக்கையாதேவர் அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கபாண்டியன், இலக்கிய அணி செயலாளர் விஜய், ஒன்றிய சேர்மன் ரஞ்சனி சுதந்திரம், சேடப்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் முத்துராமன், வாலாந்தர் பார்த்தீபன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக்

அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையிலான நிர்வாகிகளும், பாரதீய பார்வர்டு பிளாக் சார்பில் அதன் நிறுவனர் முருகன்ஜி தலைமையில் நிர்வாகிகள், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் சார்பில் அதன் நிறுவனர் சங்கிலி தலைமையில் நிர்வாகிகள், ம.தி.மு.க. சார்பில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நிர்வாகிகள், காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் நகர தலைவர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அனைத்து கள்ளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகளும், சீர்மரபினர் நல சங்கம் சார்பில் உயர்மட்ட குழு தவமணி அம்மாள் தலைமையிலும் பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் நல சங்கம் சார்பாக செல்வபிரீத்தா தலைமையிலும்

பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் மொக்கராஜ், சின்னச்சாமி, நகர தலைவர் முத்தையா தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆட்டோ சங்கத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் மூக்கையாத்தேவரின் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், மாநில பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், எம்.ஜி.ஆர். இளைஞரணி ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com