தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - முழு விவரம்

தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
திருவண்ணாமலை:-
ஆரணி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆரணி டவுன், சைதாப்பேட்டை, ஈ.பி.நகர், சத்தியமூர்த்தி சாலை, கொசப்பாளையம், வி.ஏ.கே.நகர், சேத்துப்பட்டு ரோடு, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, விண்ணமங்கலம், மேல்சீசமங்கலம், வேலப்பாடி, இரும்பேடு, எஸ்.வி.நகரம், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
இதேபோல் வந்தவாசி கோட்டத்திற்கு உட்பட்ட வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி மற்றும் மேல்மா, ஆலத்தூர், நர்மாபள்ளம், தேத்துரை, அத்தி, தென்எலப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று வந்தவாசி கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர்:-
பீளமேடு துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாராம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி. எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுருகார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.
ரேஸ்கோர்ஸ்
இதுபோன்று ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோஸ், அவினாசி ரோடு (அண்ணா சிலை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
காந்திபுரம்
மேலும் டாடாபாத் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு (பகுதி), நாராயணகுரு ரோடு. சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.சாலை, பாரதி பார்க்-1, 2, 3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவாண் பகதூர் சாலை பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபீல் யூ மில்ஸ், ராம்நகர், அவினாசி சாலை, காந்திபுரம் பஸ் நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தா புதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தாகாலனி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.
சேலம்:-
தும்பிப்பாடி துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தும்பிப்பாடி, மாட்டுக்காரன்புதூர், காடையாம்பட்டி, பெத்தேல்பாலம், சந்தைப்பேட்டை, உம்பிளிக்கம்பட்டி, சுண்டக்காப்பட்டி, காமலாபுரம், சிக்கனம்பட்டி, பல்பாக்கி, தாத்தியம்பட்டி, சின்னமொரப்பம்பட்டி, காமாண்டப்பட்டி ஆகிய பகுதிகளிலும்,
தொப்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உம்மியம்பட்டி, செக்காரப்பட்டி, தொப்பூர் ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் கே.ஆர்.தோப்பூர், தாரமங்கலம் துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) கோடைகால மற்றும் பருவமழை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பூமிநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கீரைப்பாப்பம்பாடி, தோளுர், இரும்பாலை, அழகுசமுத்திரம், கே.ஆர்.தோப்பூர், பாகல்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தாரமங்கலம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட அமரகுந்தி, தொளசம்பட்டி, ஊ. மாரமங்கலம், காடம்பட்டி, வேடப்பட்டி, சிக்கம்பட்டி, மூலக்கடை, பெரியேரிப்பட்டி, ராமகிருஷ்ணனூர், அம்மன்கோவில்பட்டி, ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:-
திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் இதனை சார்ந்த சுற்றுவட்டார பகுதிகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி
இதேபோல் திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, உஞ்சினி, பழமார்நேரி, கச்சமங்கலம், மாரனேரி, செய்யாமங்கலம், பாதிரகுடி, நேமம், கல்லணை, கோவிலடி, திருச்செனம்பூண்டி, மைக்கேல்பட்டி, பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, வானாரங்குடி, பொதகிரி, கூத்தூர், மகாராஜபுரம், வடுககுடி சாத்தனூர், வரகூர், கண்டமங்கலம், மணத்திடல், கடம்பங்குடி, ஐம்பதுமேல் நகரம், நடுக்காவேரி, உள்ளிட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
திருப்பூர்:-
திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளான அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள்,
ஷெரிப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம் (ஒருபகுதி), கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார்காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இதுபோல் பழவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பழவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
திருச்சி:-
கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர்,
பெருவளப்பூர், வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி.கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை லால்குடி இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:-
பழனி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பழனி, சிவகிரிப்பட்டி, ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, சின்னக்கலையம்புத்தூர், கருப்பணகவுண்டன்வலசு, புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல், பழனி மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி வேடசந்தூர் நகர்ப்பகுதிகள், இலகுவனம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனானூர், காளனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல், வேடசந்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம்:-
வளவனூர் துணை மின்நிலையத்தில் உள்ள செங்காடு மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குடுமியாங்குப்பம், மல்ராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குப்பாளையம், பெத்தரெட்டிக்குப்பம், எரிச்சினாம்பாளையம், மேல்பாதி, நரையூர், குருமங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:-
சங்ககிரி அருகே ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சங்ககிரி நகர், சங்ககிரி ரெயில் நிலையம், தேவண்ணக்கவுண்டனூர், சுண்ணாம்பு குட்டை, ஐவேலி, ஒலக்கச்சின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிபாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நெல்லை:-
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் நாளை (17.5.2025) சனிக்கிழமை, மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில், பஜார் மின் பாதைக்கு உண்டான பகுதியில் அத்தியாவசியம் மற்றும் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
அதன் காரணமாக ஹமீபுரம், சந்தை முக்கு, நேதாஜி ரோடு, குறிச்சி, ஆசாத் ரோடு, பஜார் ஏரியா, மூத்த மீரா பள்ளி ஸ்ட்ரீட், GH, காயிதேமில்லத் காலனி, சித்திக்நகர், நேருநகர், பாத்திமாநகர் 1 மற்றும் 2, பூங்காநகர், அன்னைஹாஜிராநகர், ஏ.கே.கார்டன், டீச்சர்ஸ் காலனி, இன்ஜினியர்ஸ் காலனி, நேதாஜி ரோடு, சி.பி.எல். காலனி, முகமதுநகர், டேனிஷ்நகர், கரீம்நகர் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று, போஸ்நகர், ரெட்டியார்பட்டி ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதுல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும்.






