

சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னையில் 08.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கொட்டிவாக்கம்: , திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பெசன்ட்நகர்: சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 1வது மற்றும் 2வது குறுக்குத் தெருக்கள், 9வது லேன், ஜீவரத்தினம் நகர் 1வது பிரதான சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ் மற்றும் வணிக வளாகம்
நொளம்பூர்: மேற்கு முகப்பேர் 5வது பிளாக் முதல் 8வது பிளாக் வரை மற்றும் கவிமணி சாலை.
கே.கே. நகர் : 1 முதல் 12 வது செக்டர்கள், ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம், பி.டி. ராஜன் சாலை, அசோக் நகர் 1, 9 மற்றும் 11-வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் 80 அடி சாலை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.