சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நாளை மறுநாள் (24.09.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
செம்பியம்: உமா நகர், முத்தமிழ்நகர் 1 முதல் 8 பிளாக் வரை, எஸ்பிஒஎ டீச்சர்ஸ் காலனி, செகரடேரியட் தெரு, அக்பர் நகர், மாதவன் நகர், பிஆர்எச் சாலை, பரிமளம் நகர், சுதா நகர், விக்னேஷ் நகர், விநாயகர் நகர், பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் காலனி, காமராஜர் தெரு, ரெட்ஹில்ஸ் சாலை, மாட தெரு, பஜனை கோவில் தெரு, கிரிஜா நகர், எம்என் நகர், சன்னதி தெரு, சிட்டிபாபு நகர், கக்கன்ஜி காலனி, ராஜா தெரு, கபிலர் தெரு, சத்தியவாணி முத்து நகர், கருணாநிதி சாலை, எம்பிஎம் தெரு, நாகை அம்மையார் தெரு, ராஜாஜி தெரு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






