முன்னாள் படைவீரர் நலத்துறையில் தேர்வு செய்யப்பட்ட நல அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணை

தகுதி உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்களிடமிருந்து 887 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முன்னாள் படைவீரர் நலத்துறையில் தேர்வு செய்யப்பட்ட நல அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணை
Published on

சென்னை,

முன்னாள் படைவீரர் நலத்துறையில் காலியாக உள்ள 08 நல அமைப்பாளர் பணியிடங்களுக்கு, தகுதி உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்களிடமிருந்து 887 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 22.01.2026 அன்று இணைய வழி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதை தொடர்ந் து, தேர்வு குழுவின் மூலமாக 06.02.2026 அன்று நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு 08 நல அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித வள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று (13.02.2026), தேர்வு செய்யப்பட்ட நல அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

முன்னாள் படைவீரர் நலத்துறையினை சார்ந்த அலுவலர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com