சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
 மின் தடை
Published on

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பராமரிப்பு பணி

சென்னையில் 03.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

திருமங்கலம்: மெட்ரோ ஜோன், சத்தியசாய் நகர், பாடிகுப்பம் பிரதான சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பழையபென், கோல்டன் ஜூபிலி அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், வி.ஜி.என், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், இரயில் நகர், 100அடி சாலை, சீனிவாசன் நகர், சிவன்கோயில் தெரு, மாடவீதிகள், நியூகாலனி, மேட்டுக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com