சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 13 Feb 2025 7:15 AM IST (Updated: 13 Feb 2025 7:16 AM IST)
t-max-icont-min-icon

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் பேஸ் 1, 2 , ராமசாமி நகர், அர்பன்டிரீ, ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூர், வானகரம் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகரம்.

ரெட்ஹில்ஸ்: ஈஸ்வரன் நகர், பம்மதுக்குளம் காலனி, இந்திரா நகர், டி.எச் சாலை, சோலையம்மன் நகர், காந்தி நகர்.

கிழக்கு முகப்பேர்: இளங்கோ நகர், மூர்த்தி நகர், சத்தியவதி நகர், ஆபீசர்ஸ் காலனி, பிங்க் அவென்யூ, இ.பி காலனி, ரத்தினம் தெரு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story