இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

சங்ககிரி:

தேவூர் துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று, தேவூர், அரசிராமணி, அரியான் காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், ஒடசக்கரை, கைகோலபாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சங்ககிரி டவுன், ஐவேலி, அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையச்செட்டிபாளையம், இருகாலூர், ஆவரங்கம்பாளையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்பு குட்டை, ஒலக்கசின்னானூர், தங்காயூர், வைகுந்தம், சங்ககிரி ரயில் நிலையம், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை சங்ககிரி மின்வாரிய இயக்கமும், பராமரிப்பு செயற்பொறியாளர் எஸ்.உமாராணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com