நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

பட்டுக்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பராமரிப்பு பணி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை நகர் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பட்டுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பட்டுக்கோட்டை பெரியதெரு, வ. உ.சி. நகர், ஆர்.வி.நகர், வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகர், தாலுகா ஆபிஸ், வீட்டு வசதி வாரியம், மயில் பாளையம், தங்கவேல் நகர், பெரியகடை தெரு, தேரடி தெரு, பாக்கியம் நகர், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டி தெரு, ஆஸ்பத்திரி ரோடு, தலையாரி தெரு, பள்ளிகொண்டான், அணைக்காடு, பொன்னவராயன் கோட்டை முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

துவரங்குறிச்சி

இதேபோல் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழஞ்சூர், காசாங்காடு, கள்ளிக்காடு, ராசியங்காடு, துவரங்குறிச்சி, மன்னங்காடு, மழவேனிற் காடு, வெண்டாக்கோட்டை பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com