சென்னையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
சென்னையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்;

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (30.09.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-21ல் பாடசாலை தெருவில் உள்ள ஜெயம் மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-41ல் கொடுங்கையூர், மணலி சர்வீஸ் சாலை, மேம்பாலம் அடிவாரத்தில் உள்ள தொப்பை விநாயகர் கோயில், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-53ல் வால்டாக்ஸ் சாலை, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் உள்ள சமுதாயக் கூடம், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-68ல் பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-106ல் அரும்பாக்கம், ரசாக் தோட்டம் பிரதான சாலையில் உள்ள முரளிகிருஷ்ணா திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9),

வார்டு-120ல் ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஐ.டி.ஐ. கல்லூரி, கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்10) வார்டு-136ல் சாலிகிராமம், தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-153ல் போரூர், உதயா நகரில் உள்ள பி.ஜே.என் திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-176ல் வேளச்சேரி, ராம் நகர் 7வது பிரதான சாலையில் உள்ள காமராஜர் மாளிகை, பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-191ல் ஜல்லடியன்பேட்டை, பாரதியார் சாலையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com