சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.
மின் தடை
Published on

சென்னை,

மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:

03.08.2026 திங்கட்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.

சென்னையில் 03.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

அம்பத்தூர்: கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை.

அடையாறு: இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா ஃபிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி ஃபிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் ஃபிளாட்ஸ்.

தாம்பரம்: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com