தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்த்த மத்திய அரசு திட்டம் - செல்வப்பெருந்தகை கண்டனம்

உடனடியாக இந்த சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்த்த மத்திய அரசு திட்டம் - செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வரும் ஏப்ரல் மாதம் முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை மீண்டும் உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு, விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கடும் பொருளாதார சுமையில் திணறிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில் மீண்டும் சுங்க கட்டணத்தை உயர்த்துவது பொதுமக்களின் வாழ்வை இன்னும் சிரமப்படுத்தும் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

மக்களின் நலனை புறக்கணித்து வரி மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் சுமையை அதிகரிக்க செய்யும் மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடுமையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com