சிலால் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க திட்டம்

சிலால் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிலால் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க திட்டம்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அய்யனார் வளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.-

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் சிலால், அங்கராயநல்லூர், அணைக்குடம், தேவமங்கலம், நாயகனை பிரியாள், வானத்திரையன்பட்டினம், பிலிச்சிகுழி ஆகிய கிராமங்களில் நிறைவான மின் அழுத்தம் அளிக்கும் பொருட்டு சிலால் கிராமத்தை மையமாகக் கொண்டு சிலால் நான்கு ரோட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் துணை மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிலம் 1.5 ஏக்கர் (60 மீட்டருக்கு 80 மீட்டர்) அரசு நில வழிகாட்டி மதிப்பில் கையகப்படுத்த தேடப்பட்டு வருவதால், பொதுமக்களின் நலன் கருதி அரசு நில வழிகாட்டி மதிப்பில் அளிக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com