மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது கதிராமங்கலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என கதிராமங்கலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது கதிராமங்கலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
Published on

கதிராமங்கலத்தில் மக்கள் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு துறைகளில் இருந்து தலைவர்கள், மக்கள் எனத் தினமும் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவை மக்களுக்குத் தெரிவித்தனர்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

கதிராமங்கலத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியே ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என கூறினார்.வெளிநாடுகளில் மக்கள் வாழாத இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.மக்களின் ஆதரவு இல்லையெனில் திட்டத்தை தூக்கியெறிய வேண்டியது அரசின் கடமை.மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்வாக பதியவைக்கவே போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com