கபிலர்மலை பகுதியில்விவசாயிகள் மானிய விலையில் மூலிகை செடி பெறலாம்தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்

கபிலர்மலை பகுதியில்விவசாயிகள் மானிய விலையில் மூலிகை செடி பெறலாம்தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்
Published on

பரமத்திவேலூர்:

கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கபிலர்மலை பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு விவசாயிக்கு 10 வகையான மூலிகை செடிகள் 20, செடி வளர்ப்பு பைகள் 10, தென்னை நார்க்கட்டி 10, மண்புழு உரம் 4 கிலோ ஆகியவை வழங்கப்படுகிறது.

மானிய விலையில் மூலிகை செடிகள் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல்-1, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றை கபிலர்மலை தோட்டக்கலை துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். மேலும் செம்மரங்கள் தேவைப்படும் விவசாயிகள் கபிலர்மலை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com