மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
Published on

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் பேங் தெரு, தியேட்டர் மண்டபம் அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து அப்பகுதி மிகவும் அசுத்தமாகவும், சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்து வந்தது. இ்ந்தநிலையில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அந்த பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு அங்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பேரூராட்சி கவுன்சிலர் சரிபா பேகம் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோ மாலிக் வரவேற்று பேசினார். இதில் முத்துப்பேட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com