மணலியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா: மத்திய மந்திரி சுரேஷ் கோபி தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் தொழிற்சாலை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
மந்திரி சுரேஷ் கோபி
Published on

திருவொற்றியூர்,

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) நிறுவனம் சார்பில், மணலி அருகே உள்ள ஆமுல்லைவாயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மத்திய இணை மந்திரி சுரேஷ்கோபி தலைமை தாங்கி, மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பங்கேற்பு

இதில் ஒரே நேரத்தில் சுமார் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தொழிற்சாலை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., சி.பி.சி.எல். மேலாண்மை இயக்குனர் சங்கர், செந்தில்குமார் எம்.எல்.ஏ., சி.பி.சி.எல். இயக்குனர்கள் ரோஹித் குமார், கண்ணன், வெங்கடேஷ், இந்து பத்திரிகை குழும தலைமை செயல் அதிகாரி நவநீத், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com