கடற்கரையில் பனை விதை விதைக்கும் பணி

தூத்துக்குடி கடற்கரையில் பனை விதை விதைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
கடற்கரையில் பனை விதை விதைக்கும் பணி
Published on

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழக முதல்-அமைச்சரின் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து 1 கோடி பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்துக்கு 15 லட்சம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி தொடக்க விழா தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடந்தது.

அமைச்சர் கீதாஜீவன்

வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி, பனை விதைகளை நடவு செய்தார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தூய்மை பணி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மையாக பாதுகாக்கும் வகையில், கடற்கரையில் நேற்று ஒட்டு மொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரேஸ்புரம் மெயின் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி, கால்வாய்கள் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாநகர நல அலுவலர் சுமதி, கல்லூரி முதல்வர் செல்வகுமார், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் சுகந்தா, வசந்தி, ஸ்டான்லி டேவிட் கோயில்பிச்சை, மாநகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com