சாலையில் நாற்று நடும் போராட்டம்

வந்தவாசி அருகே சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.
சாலையில் நாற்று நடும் போராட்டம்
Published on

வந்தவாசி

வந்தவாசி ஒன்றியம், சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்டது கோயில்குப்பம் கிராமம். வந்தவாசி- விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரிலிருந்து கோயில்குப்பம் கிராமத்துக்கு செல்லும் சுமார் 1 கி.மீ. தூர தார்சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.

மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் இந்த சாலை சேறும் சகதியுமாக ஆனது.

இந்த நிலையில் புதிய சாலை அமைக்கக் கோரி அந்த கிராம பெண்கள் சாலை நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தார் சாலை போடப்பட்டது.

போட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை சேதமடைய தொடங்கியது. காலப்போக்கில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது.

மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கலில் செல்வோர் சேற்றில் சிக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புதிய சாலை அமைக்கக் கோரி சாலையில் நாற்று நடும் போராட்டம் செய்கிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com