பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு: முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு: முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்
Published on: 

சென்னை,

'தஞ்சாவூர் மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' உள்ளிட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார். அவருக்கு வயது 75. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த கிருஷ்ணராஜ், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com