புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன் தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மாதையன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com