அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி

அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி
Published on

அருப்புக்கோட்டை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு நகர பொறுப்பாளர் தஸ்தகீர் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தாமஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காத்த முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com