திருநெல்வேலியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு


திருநெல்வேலியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
x

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன் என்று உறுதிமொழி எடுத்தனர்.

திருநெல்வேலி

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது அவர்கள் அனைவரும், "போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்" என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.

1 More update

Next Story