

பழனி எக்ஸ்பிரஸ்
கேரளம் மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து சென்னையை நோக்கி செல் லும் பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை 3.50 மணியளவில் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பழனி, திண்டுக்கல், சேலம் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.08 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது. அப்போது ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே காவே ரிப்பட்டு பகுதியில் தண்டவாளத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.
உடனே அவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு ரெயில் நிலைய அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையிலான கருங்கல்லை அகற்றினர். இதனால் 20 நிமிடம் தாமதமாக ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி சென்றது.இதையடுத்து தண்டவாளத்தில் கருங்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து சுற்று வட்டாரப் பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் சென்னையை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்ப்பதற் காக தண்டவாளத்தில் கருங்கல் வைத்திருந்ததைப் பார்த்து என்ஜின் டிரைவர் சாதுரியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் 20 நிமிடம் காலதாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். அந்த நேரத்தில் வேறு ரெயில்கள் எதுவும் வராததால் போக்கு வரத்துப் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.