பிளஸ்-1 மாணவன் தற்கொலை

பிளஸ்-1 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவன் தற்கொலை
Published on

திருச்சி உறையூர் சந்திரசேகரபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 16). திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் ஜெகதீஸ்வரன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com