சென்னையில் பிளஸ் 1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆவடி பகுதியில் ஒருவர் குடும்பத்துடன் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது, பிளஸ் 1 மாணவர் தேர்வு இருப்பதாக கூறி சுற்றுலாவுக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
சென்னை, ஆவடி காந்தி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மனோகரன், கணினி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் சாய்தீபக் (வயது 17), அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 11ந் தேதி மனோகரன் குடும்பத்துடன் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். ஆனால் தேர்வு இருப்பதாக கூறி சாய் தீபக் பெற்றோருடன் சுற்றுலாவுக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார்.
சுற்றுலாவுக்கு சென்ற மனோகரன் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது சாய் தீபக், படுக்கை அறையில் மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






