விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை

குடவாசல் அருகே விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்
விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை
Published on

குடவாசல் அருகே உள்ள ஓலையாமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவியரசி (வயது 16). இவர் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 15-ந் தேதி கவியரசி வீட்டு வேலை செய்யாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கவியரசி பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குடவாசல் போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com