ஜல்லிக்கட்டு காளை உதைத்ததில் பிளஸ்-1 மாணவர் சாவு

ஜல்லிக்கட்டு காளை உதைத்ததில் பிளஸ்-1 மாணவர் இறந்தார்.
ஜல்லிக்கட்டு காளை உதைத்ததில் பிளஸ்-1 மாணவர் சாவு
Published on

சோமரசம்பேட்டை, செப்.5-

திருச்சியை அடுத்த ராம்ஜிநகர் அருகே உள்ள இனாம் மாத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மகன் மருதுபாண்டி (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 28-ந்தேதி மருதுபாண்டி அதேபகுதியில் உள்ள அக்காள் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது, அக்காள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைக்கு புண்ணாக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் காளை திடீரென மருதுபாண்டியின் நெஞ்சில் எட்டி உதைத்தது. இதனால் வலியால் துடித்த அவரை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மருதுபாண்டி நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com