குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-1 மாணவி.. உறவினர் கைது

உறவினர், ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்ததாக மாணவி கூறியுள்ளார்.
குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-1 மாணவி.. உறவினர் கைது
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சமூக நலத்துறைக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி உள்ளிட்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது உறவினரான சாமிநாதன் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்ததாக அந்த மாணவி கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் சாமிநாதன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிக்கு குழந்தை பிறந்ததற்கு காரணமான சாமிநாதனுக்கு திருமணம் ஆகி மனைவி இறந்துவிட்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது. அதைத்தொடர்ந்து சாமிநாதன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com