நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மிட்டாநூலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பூரணபிரதாஷ்(வயது17). இவர் ஏலகிரி அருகே பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மாணவர் பூரணபிரதாஷ்க்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் வயிற்று வலியால் அவதிக்குள்ளான பூரணபிரதாஷ் நூலஅள்ளியில் பெற்றோர் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுள்ளார்.

அப்போது வலி தாங்க முடியாத மாணவர் பூரணபிரதாஷ் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசுப் பள்ளி மாணவர் பூரணபிரதாஷ் தூக்கிட்ட இறந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com