பிளஸ்-1 மாணவன் மாயம்

பிளஸ்-1 மாணவன் மாயமானார்.
பிளஸ்-1 மாணவன் மாயம்
Published on

திருவெறும்பூர் அருகே உள்ள குருநாதன் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் விக்னேஷ் (வயது 16). இவர் திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சரியாக படிக்காததால், அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com