

பிளஸ்-1 மாணவி கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சோலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த சுடலைமணி மகள் அபர்ணா (வயது 17). இவர், செபத்தையாபு ரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவின ரான காசிபாண்டியன் மகன் முத்துராஜ் (23) என்பவ ரும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் காலையில் அபர்ணாவின் வீட்டிற்கு முத்துராஜ் சென்றுள்ளார்.அங்கு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்தி ரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி யாக குத்தியதுடன், அவரது கழுத்தில் துப்பட்டாவை போட்டு இறுக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்து தப்பி ஓடிய முத்துராஜ், பஸ்நிறுத்தத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். கத்தியால் குத்தப்பட்ட அபர்ணா சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஆதாம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முத்துராஜை மீட்டு சிகிச்சைக் காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துராஜிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நானும், உறவினரான அபர்ணாவும் காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருந்தனர். அவரது படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தோம். நான் அடிக்கடி அபர்ணாவை சந்தித்து வந்தேன். சமீப காலமாக அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நான் கண்டித்தேன். ஆனாலும், அவர் செல்போனில் யாருடனோ பேசி வந்தார்.
நேற்று காலையில் அவர் வீட்டு வாசலில் நின்றவாறு செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற நான் செல்போனில் பேசியது குறித்து கேட்டதால்,என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த நான் கத்தியால் அவரை குத்தினேன். மேலும், அவர் அணிந்திருந்த துப்பட்டா வால் கழுத்தை இறுக்கினேன். அவர் மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்து தப்பி ஓடிய நான், அவள் இல்லாத உலகில் வாழ விரும்பாமல் விஷத்தை குடித் தேன். இதில் நான் பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து சாயர்புரம் போலீசார் நேற்று முத்துராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.மேலும், அபர்ணாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரி டம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை சொந்த ஊரான முள்ளக்காடுக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்தனர்.