பிளஸ்-1 மாணவி கர்ப்பம்: 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

இருவரும் பழகி வந்தநிலையில், தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பிளஸ்-1 மாணவி கர்ப்பம்: 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியி உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தந்தைக்கு உடல்நல பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிறுமியின் தாய்க்கு உதவியாக இருக்க, உறவினரான 17 வயது சிறுவன் அவரது வீட்டில் கடந்த சில மாதங்களாக தங்கி உள்ளார்.

இதனால் சிறுமிக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பழகி வந்தநிலையில், தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com