பள்ளியில் சாதியை சொல்லி கிண்டல் செய்ததால் விரக்தி: பிளஸ்-1 மாணவர் தற்கொலை

பிளஸ்-1 மாணவரை சக மாணவர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

கோவை,

கோயம்புத்தூர் பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார் (45 வயது). இவர் கேரளம் மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவுசல்யா தேவி (40 வயது). இவர்களுக்கு அகிலன் (16 வயது) என்ற மகன் இருந்தார். அகிலன் பீளமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் ஆயுதபூஜை விடுமுறை முடிந்த பின்னர் நேற்று காலையில் அகிலன் பள்ளிக்கு சென்றார். பள்ளி தொடங்குவதற்கு முன்பு பிரார்த்தனை நேரம் நடக்கும்போது சக மாணவர்கள் அகிலனை சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அகிலன் வீட்டுக்கு சென்றுவிட்டார். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் அகிலன் தனியாக இருந்தார்.

மாணவர்கள் தொடர்ந்து சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்து வந்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com