விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.08 சதவீதம் தேர்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.08 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.08 சதவீதம் தேர்ச்சி
Published on

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 96 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 62 பள்ளிகளில் இருந்தும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 86 பள்ளிகளில் இருந்தும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 41 பள்ளிகளில் இருந்தும் ஆக மொத்தம் 189 பள்ளிகளில் இருந்து 10,263 மாணவர்களும், 10,709 மாணவிகளும் என மொத்தம் 20,972 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

92.08 சதவீதம் தேர்ச்சி

இதில் 9,114 மாணவர்களும், 10,197 மாணவிகளும் என மொத்தம் 19,311 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.8, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.2. மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.08 ஆகும்.

கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்-2 தேர்வில் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 86.98 சதவீத தேர்ச்சி பெற்றது. இதனை காட்டிலும் தற்போது விழுப்புரம் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 5.01 சதவீதம் அதிகரித்துள்ளது கல்வித்துறை அதிகாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த தேர்ச்சியின் மூலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் சற்று முன்னேறி 27-வது இடத்தை பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயர் பெறு வந்த நிலையில் இந்த ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் சற்று முன்னேறியிருப்பது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com