பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பரங்கிப்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

புவனகிரி:

பரங்கிப்பேட்டை அகரம் பெரியகோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். கொத்தனார். இவருடைய மகள் ருத்ராதேவி(வயது 17). இவர் ஆண்டாள் முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 7-ந் தேதி ருத்ராதேவிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதன் தொடர்ச்சியாக ரத்தினத்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ருத்ராதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனிடையே வெளியே சென்றிருந்த பெற்றோர், வீட்டுக்கு வந்தனர். அங்கு தங்களது மகள், தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருத்ராதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com