பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

கடலூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருடைய மகள் தேவிகா (17 வயது). இவர் மேற்குராமாபுரம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று ஞானசேகரனும், அவரது மனைவியும் கிழக்கு ராமாபுரத்தில் உள்ள காளி கோவில் கும்பாபிஷேக விழாவை காண புறப்பட்டனர்.

அப்போது தேவிகா, நானும் கும்பாபிஷேகத்தை பார்க்க வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஞானசேகரன் நீ வர வேண்டாம் என்று கூறிவிட்டு, மனைவியுடன் கும்பாபிஷேகத்தை பார்க்க சென்று விட்டதாக தெரிகிறது. பின்னர் கும்பாபிஷேகத்தை பார்த்து விட்டு 2 பேரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது தேவிகா வீட்டின் மேற்கூரையில் உள்ள கம்பியில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்த தேவிகாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஞானசேகரன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com