தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முகமது தஸ்லீம். அவரது மகன் முகமது குஸ் நசீப் (17 வயது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக விம்கோ ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முகமது குஸ் நசீப் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான பள்ளி மாணவன் முகமது குஸ் நசீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com