பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் கோபி மகள் சிவகாமி (வயது 17). இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவகாமி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவியின் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில், நேற்று விருத்தாசலம் போலீசார் தகவலறிந்து சென்று சிவகாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதியிருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில் மாணவி எழுதியிருப்பதாவது:-

கலெக்டராக முடியாது

பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற கணித தேர்வை நான் சரியாக எழுதவில்லை. தமிழ் தேர்வுக்கும் நான் சரியாக படிக்கவில்லை. நான் நன்றாக படித்து கலெக்டராக வேண்டும் என்று எனது பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. கலெக்டராகவும் முடியாது. இது பற்றி அறிந்ததும் பெற்றோரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. இப்படியே படித்தால் என்னை விரைவில் திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். ஆதலால் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் கடவுளிடம் செல்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் மாணவி எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com