

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால், கேரள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கோவையில் படிக்கும் 22 வயது கல்லூரி மாணவர் பிஜோ எஸ்.தியோ, மாணவியை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தியோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.