பிளஸ்-2 மாணவி கர்ப்பம் - சக மாணவன் மீது போக்சோ வழக்கு

மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஈரோடு,

ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 17 வயது மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்த சக மாணவனுடன், மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com