கோபி அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்; தாய்மாமன் உள்பட 2 பேர் கைது

கோபி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளிடம் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.
கோபி அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்; தாய்மாமன் உள்பட 2 பேர் கைது
Published on

கோபி,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளிடம் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர், 'தனது தாய்மாமன் தொடர்ந்து காதலிப்பதாக வற்புறுத்தி தொல்லை கொடுப்பதாகவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், இதுபற்றி வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் தவறாக தகவல் பரப்புவேன்' என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

போக்சோ வழக்கில் கைது

உடனே சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் கொடுத்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார், மாணவியின் தாய்மாமனான கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னப்புலியூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 27) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மாணவியை பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் தமிழ்ச்செல்வன், மாணவிக்கு தொல்லை கொடுக்க உடந்தையாக இருந்ததாக தமிழ்ச்செல்வனின் தாய் விஜயா ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com