ஆகஸ்ட் 6 முதல் பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், அதற்கான தேர்வுக்கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 6 முதல் பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: அட்டவணை வெளியீடு
Published on

சென்னை

பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் திருப்தி இல்லை என்று கருதுகிறவர்களுக்கும், அதேபோல் பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், இன்று முதல் 27-ந்தேதி வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாக பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் குறிப்பிட்ட பாட தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும் தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது.

மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்று ஆன்-லைனில் சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-)

அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என கூறப்ப்ட்டு உள்ளது.

இதன்படி மே 2021 பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்கள் இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 6-ம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9-ம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் பிளஸ் 2 பிரிவுகளுக்கு ஏற்றவாறும் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு;-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com