பிளஸ்-2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை 14-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் தேர்வர்கள் ஜூன் 14-ம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்-2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை 14-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
Published on

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஜூன் 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு தொடங்குகிறது. ஜூன் 20ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 26 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com