

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டது. இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. காலை 9.30 மணிக்கு ரிசல்ட் வெளியாக உள்ளது.